• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

December 4, 2018 தண்டோரா குழு

மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு மட்டுமின்றி பல்வேறு எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து திமுக சார்பில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் டிசம்பர்4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திமுக-வின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

ஸ்டாலினுடன், திருநாவுக்கரசர், திருமாவளவன், காதர்மொய்தீன் உள்ளிட்ட தலைவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் படிக்க