December 8, 2020
தண்டோரா குழு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் விரோத சட்டங்களை கண்டித்தும் அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 13 நாட்களாக கடுங்குளிர் என்றும் பாராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளான் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோவை மாவட்ட மக்கள் நீதி மைய்யத்தினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மத்திய அரசை கண்டித்தும் விதமாக கோசங்கள் எழுப்பியவர்கள் இதில் மத்திய அரசு உடனடியாக இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில மாநில பொதுகுழு உறுப்பினர் தங்கவேல்,மாநில மண்டல அமைப்பாளர் ரங்கநாதன்,மாநில செயலாளர் விவசாய அணி டாக்டர் மயில்சாமி செய்தி மற்றும் ஊடகம் துனை செயலாளர் பங்கஜ் சுரபி மாநில மண்டல இளைஞர் அணி துனை செயலாளர் பிரவீண்,மாநில துனை செயலாளர் வழக்கறிஞர் அணி உதயகுமார்,சப்னா”கார்த்திகேயன்
மாவட்ட செயலாளர்கள் தம்பு ராஜ்,சிட்கோ சிவா, பிரபு, தாமரை கண்ணன் மற்றும் ,மகளிர் அணியினர், நகர செயலாளர்கள்,வார்டு செயலாளர்கள்,வட்ட செயலாளர் கள் சார்பு அணியினர் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும்,மத்திய அரசு இச்சட்டங்களை திரும்பி பெறவில்லை என்றால் மக்கள் நீதி மைய்யத்தினர் அனைவரும் ஒன்று திரண்டு டெல்லி செல்வோம் எனவும் தெரிவித்தனர்.