March 31, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.உச்சநீதிமன்றம் வழங்கிய காலக்கெடு 2 நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.எனினும், இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கபடவில்லை.
இந்நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது. காவிரி தீரப்பை மத்திய அரசு செயல்படுத்தாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்து விட்டதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. 49 பக்கங்கள் கொண்ட நீதிமன்ற அவமதிப்பு வக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.