• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை அளிக்கிறது – வானதி சீனிவாசன்

September 21, 2019 தண்டோரா குழு

தற்போதைய பா.ஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதன்மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாகவும் அமைந்துள்ளதாக அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

க்ரைண்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 5% ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டி 12% குறைந்துள்ளது மேற்கு தமிழகத்தின் நீண்ட நாட்கள் கோரிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏற்று அதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மாபெரும் ஷாப்பிங் கண்காட்சி நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. தற்போதைய பாஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்சனை கேட்டறிந்து அதன் மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக அமைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. ரயில்வே பணிகளில் வடநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பதாக வெளியான தகவல் குறித்து முழு விவரம் வெளிவந்தவுடன் அது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக கூறினார்.

மேலும் படிக்க