மத்திய அரசின் புதிய ஹால்மார்க் முத்திரைக்கு எதிர்ப்பு தெரவித்து கோவையில் தங்கநகை வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
ஆபரண தங்கத்தில் உள்ள தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுவதற்கான அதிகாரப்பூர்வமான முத்திரையாக ஹால்மார்க் உள்ளது. இந்தியதர நிர்ணய அமைவனத்தால் கடந்த 2000 – ம் ஆண்டு முதல், ஆபரணம் வாங்குவோர்,மாற்றுக்குறைவான தங்க நகைகளை வாங்கி ஏமாற்றம் அடைவதை தவிர்க்க இந்த முத்திரை பயன்படுகிறது.
இந்நிலையில் இதில்,உள்ள முறைகேடுகளை தடுக்க,தங்க நகைகளை விற்கும்போது ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கி மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்தது.இந்த புதிய விதிமுறை கடந்த ஜூன் மாதம் 16 – ந் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில்,இந்த விதிமுறையை தங்க நகை விற்பனையாளர்கள் எதிர்த்து வந்தனர்.
இந்த நிலையில், புதிய ‘ஹால்மார்க்’ விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தங்க நகை கடைகள் காலை 9:00 முதல், 11:30 மணி வரை மூடப்பட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் புதிய ஹால்மார்க் முத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயமுத்தூர் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்றது.இதனால் கோவையின் முக்கிய பகுதிகளான பெரியகடை வீதி, கிராஸ்கட் சாலை,நூறடி ரோடு போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து நகை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இது குறித்து,கோயமுத்தூர் ஒருங்கிணைந்த பொற்பொல்லர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரகுநாதன் சுப்பையா கூறுகையில்,
இந்திய தர நிர்ணய ஆணையம், நகை கடைகள் வாயிலாக விற்கப்படும் தங்க நகைகளுக்கு, இனி புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது.நகைகளில் ஹால்மார்க் முத்திரையை எதிர்க்கவில்லை; வரவேற்கிறோம். ஆனால், ஹால்மார்க் அடையாள எண்ணை கொண்டு வர வேண்டும் என்பதைத் தான் எதிர்க்கிறோம். ஏற்கனவே கொரோனா காலத்தில் பொற்கொல்லர்கள் பாதிப்படைந்த நிலையில்,இது மேலும் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்.
பேட்டியின் போது கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பொருட்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தண்டபாணி ராஜ்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு