• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது :சிறு,குறு தொழில்முனைவோர்கள் கருத்து

February 1, 2021 தண்டோரா குழு

மத்திய அரசின் சார்பில் மத்திய நிதியமைச்சர் நீர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கோவையில் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் தலைவர் மணிராஜ் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் பட்ஜெட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, உற்பத்தி துறை மேம்பாட்டிற்கு ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு போன்றவைகளை வரவேற்கிறோம். ஆனால் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு ரூ. 15 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது இல்லை. கொரானா காலத்தில் நிலுவையாக இருந்து 6 மாத கால வட்டி தொகைகளை தள்ளுபடி செய்ய வேண்டும். பம்ப்செட்டுகள் மீதான ஜி.எஸ்.டி குறைப்பு பற்றிய அறிவிப்பு இல்லை. இந்த பட்ஜெட்டில் குறுந்தொழில் முனைவோர்களுக்கு பயனுள்ள அறிவிப்புகள் ஏதும் இல்லாதது கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இவ்வாறு மணிராஜ் கூறினார்.

இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:

இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம். 6 ஜவுளி பூங்காங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஜவுளி பூங்கா தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி தொழில்கள் வளர்ச்சியடையும். தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் சாலை போக்குவரத்து மேம்படும். இது போன்ற அறிவிப்புகளால் தொழில் துறை மேம்படும். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க தலைவர் சிவக்குமார் கூறியிருப்பதாவது:

மூலப்பொருட்களுக்கான சுங்கவரி 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கதக்கது. சிறு,குறுந் தொழில் முனைவோர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த சலுகை அறிவிப்புகள் இல்லை. மூலப்பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி குறைப்பதற்கான அறிவிப்புகள் இல்லை. மேலும் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லாதது ஆகியவை ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு சிவக்குமார் கூறினார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

குறு, சிறு தொழில்களுக்கு உதவிடும் வகையில் அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளித்ததுள்ளது. குறுந்தொழில்கள் முன்னேற்றத்துக்காக முன்வைக்கப்பட்ட எவ்வித கோரிக்கையும் அறிவிக்கப்படவில்லை. கோவை மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர் நிறுவனங்கள் உள்ளன. கோவையின் மையப்பகுதியில் குறுந்தொழிலுக்கு என தொழில் பேட்டை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தோம் ஆனால் அதற்கான அறிவிப்பு இல்லை. இந்த பட்ஜெட்டை பொறுத்தவரையில் குறுந்தொழில்களுக்கு எதிர்பார்த்த அறிவிப்புகள் எதுவும் இல்லை.

இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

மேலும் படிக்க