June 20, 2018
தண்டோரா குழு
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன்,பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன்,ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.அப்போது,அர்விந்த் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் மேலும் ஒரு வருடம் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில்,மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியை அர்விந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்துள்ளார்.சொந்த காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளார்.அதனால்,அவரது ராஜினாமாவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏற்று கொண்டார்.
இது தொடர்பாக அருண்ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில்,
மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா வருத்தமளிக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் அர்விந்த் சுப்ரமணியன் என்னை,வீடியோ கான்பரன்சிங் முறையில் தொடர்பு கொண்டார்.அப்போது, சொந்த காரணங்களுக்காகவும், குடும்ப பணிகள் காரணமாகவும் அமெரிக்கா திரும்ப உள்ளதாக கூறினார்.இதனால்,அவரது ராஜினாமாவை ஏற்பதை தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளார்.