July 7, 2021
தண்டோரா குழு
பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு மே மாதம் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த பா.ஜ.க அமைச்சரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு கேபினட் அமைச்சருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கு வசதியாக இன்று ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷவர்த்தன் உள்ளிட்ட 12 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது, மத்திய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
எல்.முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் உள்ளிட்ட அரசு பதவிகளை வகித்திருக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.