• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மது குடிக்க தண்ணீர் கொடுக்காததால் டிபன் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து

February 1, 2022 தண்டோரா குழு

கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் ஜோஜி(40). இவர் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று ஜோஜி புலியகுளம் தாமு நகரில் உள்ள ஒயின்ஷாப்புக்கு மது குடிக்க தனது உறவினர் ஒருவருடன் சென்றார். மது குடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த 3 பேர் ஜோஜியிடம் தண்ணீர் பாட்டில் கேடுள்ளனர். அதற்கு ஜோஜி தன்னிடம் தண்ணீர் பாட்டில் வாங்க பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. ஆத்திரமடைந்த 3 பேரும் அவரை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினர். தடுக்க முயன்ற அவரது உறவினர் ராபின் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் இருவருக்கும் தலை, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்ருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி விட்டு 3 பேரும் தப்பி சென்றனர். பின்னர் காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் இருவரையும் கத்தியால் குத்தியது கோவை புலியகுளம் அலமேலு மங்கம்மாள் லே-அவுட்டை சேர்ந்த பெயிண்டர் விஜய், புலியகுளம் சிறுகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பெயிண்டர் ஜக்கி ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சார்லஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க