February 24, 2018
மதுரையை விட திருச்சி பொதுக்கூட்டம் இன்னும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என கட்சி உறுப்பினர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மதுரையில்(பிப் 21)அன்று தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.இதனையடுத்து அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில் ஏப்ரல்.4ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,கட்சி உறுப்பினர்களுக்கு கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதில், கறை வேட்டி கட்ட வேண்டாம் எனவும், அனைத்து மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த இடத்திலும் காவல்துறையினரின் உத்தரவை மீறி பேனர் வைக்கவோ,விளம்பரம் செய்யவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.