March 1, 2018
தண்டோரா குழு
மதுரையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடிகள் மாயக்கண்ணன், சகுனி கார்த்திக் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். ரவுடிகளை சரண்அடையுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். அப்போது, ரவுடிகள் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடிகள் மாயக்கண்ணன், சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்