• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுபான விற்பனையை அதிகரிக்க பெண்கள் பெயரை சூட்டுங்கள்- பா.ஜ.க அமைச்சர்

November 7, 2017 தண்டோரா குழு

மகாராஷ்டிராவில் மதுபானங்களுக்கு பெண்களுடைய பெயர் வைத்தால், அதன் விற்பனை அதிகம் ஆகும் என்று பா.ஜ.க வைச் சேர்ந்த அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் வட பகுதிலுள்ள நண்டுர்பரிலுள்ள சட்புடா கூட்டுறவு சக்கரை தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை(நவ 4) நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு, பா.ஜ.க கட்சியின் நீர் பாசன துறை அமைச்சர் மகாஜன் பேசினார்.அவர் அந்த கூட்டத்தில் பேசுவதற்கு முன், அந்த தொழிற்சாலையின் யூனிட் தலைவர், தங்களுடைய மதுபான விற்பனை குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.

அதன் பிறகு மகாஜன் பேசுகையில், “உங்கள் மதுபானம் அதிகமாக விற்பனை ஆவதில்லை என்று கூறினீர்கள். உங்கள் மதுபானத்தின் பெயர் என்ன என்று கேட்டபோது, ‘மகாராஜா’ என்று பதில் அளித்தீர்கள். ‘மகாராஜா’வுக்கு பதிலாக ‘மகாராணி’ என்று பெயரிட்டால், அதனுடைய விற்பனை அதிகமாகும்.

“ஒரு மாநிலத்தின் அமைச்சர் மதுபானம் அதிகமாக விற்பனை செய்ய ஊக்குவிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடைய இந்த கருத்துக்கு பல அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் பகுதியில், மதுபான விற்பனைக்கு எதிராக தேசிய காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க