• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுக்கரை பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரை பாலத்தில் உடைப்பு

May 4, 2023 தண்டோரா குழு

கோவை மதுக்கரை பகுதியில் நேற்று பெய்த கனமழையால், கடந்த 2020ல், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரை பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு அருகே இருந்த சாலை முழுமையாக மழைநீரில் அடித்து செல்லப்பட்டது.

கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே இருந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு, அருகே இருந்த மதுக்கரையில் இருந்து குரும்பபாளையம் செல்லும் தார் சாலையும் முழுமையாக உடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும் மதுக்கரை சாலையில் உள்ள மின்கம்பமும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 அதிமுக ஆட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைப்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால் தரைப்பாலத்தின் கீழ் நீர் செல்ல போதிய வழியை ஏற்படுத்தாமல் அவசரகதியில் பணிகள் முடிக்கப்பட்டதே வெள்ள நீர் வெளியேறி பாலம் உடையவும் காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இந்நிலையில் மதுக்கரை தரைப்பாலம் மற்றும் சாலை அடித்துச்செல்லப்பட்ட பகுதியில் மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். தரைப்பாலத்திற்கு முன்னதாக தடுப்பணை கட்டவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க