பெண்கள் விரசமின்றி நடனமாடித் தொழில் செய்ய முற்படுவாரேயாயின்,அது வீதியோரத்தில் பிச்சை எடுக்கும் செயலை விட மிகச் சிறந்தது என்று உச்ச நீதி மன்றம் மஹாராஷ்டிரா மாநில அரசுக்கு பதிலடி கொடுத்தது.
மஹாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 1200 மதுக்கூடங்களும் , உணவு விடுதிகளும் உள்ளன.அவற்றில் 139 மும்பையில் உள்ளது.அங்கே பொழுது போக்கிற்காக நடனமும் அரங்கேற்றப்படும்.அந் நடனமங்கையர்கள் அத்தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் தங்கள் வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வர்.
2005 ல் மாநில அரசு எல்லா மதுக்கூடங்களையும் மூடுமாறு உத்தரவிட்டது.
மாநில அரசு தற்போது 154 மதுக்கடை உரிமையாளர்களுக்கு ,தொழில் உரிமம் கொடுக்க மறுத்துள்ளது.
அரசின் குற்றசாட்டு என்னவென்றால் இங்கு நடைபெறும் நடனங்கள் பெரும்பாலும் விரசமாக இருப்பதால் ,மக்களின் நலனைக் காக்கும் பொருட்டு இவ் அரங்குகளை அனுமதிக்கக்கூடாது என்பதாகும்.
மாநில அரசு ஏப்ரல் 12ம் தேதி ஏகமனதாக ஒரு சட்டம் நிறைவேற்றியது.அதில் சில விதி முறைகளை விதித்தது.
அதன் சாரம்:
1.இந்த நடன அரங்கங்கள் பள்ளி நிறுவனங்களிலிருந்தும்,மத சார்பு நிறுவனங்களிலிருந்தும் 1 கி.லோ மீட்டர் தள்ளீயிருக்க வேண்டும்.
2.அதன் வேலை நேரம் :மாலை 6 மணி முதல் 11.30 வரை .
3.மது பானவகைகள் அரங்கிற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
4.மற்றும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியிலின்றி,குறைவான ஜனத்தொகை உள்ள பகுதியில்தான் ,அதுவும் அவர்களது ஒப்புதலின் பின்பே இவ்வரங்குகள் அப்பகுதியில் அமைக்கப்படவேண்டும்.
இந்த நிபந்தனைகள் அனைத்தையும் அனுசரிப்பதென்பது இயலாத காரியம் என்று உரிமையாளர்கள் நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி .தீபக் மிஷ்ரா தலைமையிலான குழுவிடம் பரிசீலனைக்கு வந்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம்,நடனம் என்பது ஒரு கலை என்றும் ,அது ஒரு தொழில் என்றும் குறிப்பிட்டது.நடனத்தில் விரசத்திற்கு இடமளிப்பது சட்டப்படி குற்றமாகும்.ஆனால் விரசத்தின் வரைமுறை,எல்லை என்ன என்பதையும் விளக்க ஆணையிட்டுள்ளது.
அப்பெண்கள் விரசமின்றி நடனமாடித் தொழில் செய்ய முற்படுவாரேயாயின்,அது வீதியோரத்தில் பிச்சை எடுக்கும் செயலை விட மிகச் சிறந்தது என்றும்,அது அவர்களை வேறு பல தகாத தொழில் செய்வதற்குத் தூண்டாது என்றும் கூறியுள்ளது.
இவ்வரங்குகளை மூடும் பட்சத்தில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.அதன் மூலம் அவர்கள் வாழ்க்கை சீரழியவும் ,பல விரும்பத்தகாத தொழில்கள் உருவாகவும் ஏதுவாகும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றம் ஒரு சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டும் வேறு சில நிபந்தனைகளை நிராகரித்தும் ஆணையிட்டது.
அதன்படி ,
அரங்கினுள் ஆங்காங்கே சி.சி.டி.வி.காமராக்கள் அமைக்கவேண்டும் .
நடன மேடைக்கும், பார்வையாளர் இருப்பிடத்திற்கும் குறைந்த பட்சம் 5 அடிகள் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியது.
இவ்வழக்கு மறுபரிசீலனைக்கு மே மாதம் 10 தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்