May 24, 2018
தண்டோரா குழு
நாகப்பட்டிணம் மாவட்டம் வண்டலூர் கிராமத்தை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் திலகர்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று அதிகாலை திடீரென செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வண்டலூர் கிராமத்தை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் திலகர் என்பவர் இன்று அதிகாலை அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து தூத்துக்குடிக்கு துணை ராணுவத்தை அனுப்பக்கூடாது 144 தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும், காவல்துறையை தூத்துக்குடி நகரை விட்டு வெளியேற்ற வேண்டும் எனக்கூறி செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி மேற்கொண்டர்.
மேலும் 5 மணிநேரம் போராட்டம் நீடித்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் தொடர்புக்கொண்டு திலகரிடம் பேசினார். இதனையடுத்து அவர் தனது போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.