• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மண்பானை விற்பனை அதிகரிப்பு

February 27, 2017 ஜாகர்

வெயில் காலம் வருவதையொட்டி கோவையில் மண்பானை விற்பனை அதிகரித்துக் காணப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குளிர்காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளன. தற்போது இரவு நேரங்களில் மிக குளிராகவும் காலை நேரங்களில் மிக வெப்பமாகவும் காணப்படுகிறது.

வெயில் காலம் நெருங்கி வருவதால் மக்கள் வெயிலிலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இயற்கையான முறையில் குளிர்ச்சி தரக்கூடிய மண்பானைகளை அதிகம் உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். மண்பானைகளில் தண்ணீர் ஊற்றி, குடித்தால் உடலுக்குக் குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். இதனால், கோவை மாவட்டத்தில் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் கவுண்டபாளையம் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மண்பாண்ட விற்பனை மையங்கள் உள்ளன. இங்கு செம்மண், களிமண், வண்டல் மண் போன்ற மண் வகைகளால் செய்யக்கூடிய பல வகையான மண்பாண்டங்கள் விற்பனைக்கு உள்ளன. தற்போது வெயில் காலம் தொடங்க ஆரம்பித்துவிட்டதால் தண்ணீர் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மண்பானைகள் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஐந்து வகை அளவில் இந்த மண்பானைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விலை 40 முதல் 15௦ வரை ஆகும். கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு விலை சற்று உயர்வாக காணப்பட்டாலும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்வதாக மண்பானை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மண்பானை விற்பனையாளர் செல்வராஜ் கூறுகையில், “மண் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. எனவே, மண்பானை விலை சற்று உயர்ந்துள்ளது. எனினும், மக்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு வாங்கி செல்கின்றனர். மக்களிடையே இயற்கை முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவு ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது” என்றார்.

மண்பானைகளில் சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும் எனவும் உணவின் சுவையும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பண்டைய காலங்களில் மண்பானைகளில் சமையல் செய்து சாப்பிட்டும், மண்பானைகளில் தண்ணீர் அருந்தியும் வந்தனர். இதனால் மக்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருந்துவந்தனர்.

ஆனால், நாகரிக வளர்ச்சி காரணமாக அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களில் சமையல் செய்து வருவதால் உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாகவே மண்பானை விற்பனை தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

இது குறித்து முருகன் கூறுகையில்,

“கடந்த மூன்று வருடங்களாக மண்பானைகளை உபயோகித்து வருகின்றேன். வருடம் ஒரு முறை பழைய மண்பானைகளை மாற்றி புதிய மண்பானைகளை வாங்கிவிடுவேன். அதில் தண்ணீரைச் சேமித்து வைத்து, பருகுவதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மேலும் அதில் சமைத்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. வெயில் காலம் தொடங்கிவிட்டது. எனவே, முன்கூட்டியே மண்பானைகளை வாங்கி வைத்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன்” என்றார்.மண்பானைகள் விற்பனை அதிகரித்து காணப்படுவதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க