January 22, 2021
தண்டோரா குழு
கடந்த ஒரு மாதமாக மசனகுடி வனப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆண் காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிந்தது.இதையடுத்து, வனத்துறையினர் யானைக்கு கும்கி யானைகள் மூலம் சென்று மருத்துவக் குழுவுடன் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் காயப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 கும்கி யானைகளை கொண்டு காயப்பட்ட யானையை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் போது வழியில் யானை பரிதாபமாக யானை உயிரிழந்தது.
இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் யானையை முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்து 3 கும்கி யானைகளை கொண்டு காயப்பட்ட யானையை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் போது வழியில் யானை பரிதாபமாக யானை உயிரிழந்தது.
இந்நிலையில் யானை குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் பொழுது அதை டயர் மூலம் நெருப்பு வைத்து துரத்தும் காட்சியும் பின்பு யானையின் மீது அந்த நெருப்பை வீசியதும் யானை காதுப் பகுதியில் மளமளவென பிடித்த தீ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, நீலகிரி மாவநல்லா பகுதியில் டயரில் தீ வைத்து காட்டு யானையின் மீது வீசிய சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ரைமன், பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.