June 14, 2018
தண்டோரா குழு
மக்கள் விரோத அரசின் ஆட்சிக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன்,
“நீதிபதிகளுன் மாறுபட்ட கருத்து மூலம் மக்களின் நம்பிக்கை தான் தோல்வியடைந்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட 21 எம்.எல்.ஏக்களும் ஒன்றாக தான் உள்ளோம். தீர்ப்பு எப்படி வந்திருந்தாலும் 18 பேரும் என்னுடன் தான் இருப்பார்கள்.மேலும்,மக்களுக்கு எதிரான அரசு நீடிக்கிறது என்ற ஒற்றை வரியே பதிலாக இருக்கிறது.புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும்,தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் எப்படி இருக்க முடியும் தீர்ப்பால் தங்கள் தரப்புக்கு எந்த பின்னடைவும் இல்லை” எனக் கூறினார்.