May 23, 2018
தண்டோரா குழு
மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்த ஆறுதல் கூறினார்.
அவர்களிடம் ஆறுதல் கூறி பேசிய கமல்,அவர்களின் துயரங்களை கேட்டறிந்து கண்கலங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் போன உயிர்களுக்கு ஈடாகாது. யாரையோ திருப்திப்படுத்தவே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார் என்ற உண்மை தெரிய வேண்டும் என கேள்வி எழுப்பினார்.