May 13, 2021
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பத்ம பிரியா விலகுவதாக அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மதுரவாயல் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் பத்ம பிரியா.இவர் அக்கட்சியின் சுற்றுசூழல் பிரிவு மாநில பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில்,இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பத்ம பிரியா விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என பதிவிட்டுள்ளார்.