April 30, 2018
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மய்யம் விசில் செயலியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதன்பின் பல்வேறு மக்கள் பிரச்சனை தொடர்பாக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மய்யம் விசில் செயலியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
அப்போது பேசிய கமலஹாசன்,
சமுதாயத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட விசில் செயலியை கட்சி உறுப்பினர்கள் பயன்படுத்தலாம். உங்கள் பகுதியின் தொடர் தவறுகளை சொல்ல விரும்புவோர், மய்யம் விசில் செயலியில் தெரிவிக்கலாம்.மய்யம் விசில் செயலி என்பது பிரச்னைகளை ஒரே நொடியில் சரிசெய்யும் மந்திரக்கோல் அல்ல, இந்த செயலி காவல்துறைக்கு உதவுவதாகவும், விமர்சனம் செய்யக்கூடியதாகும் இருக்கும் என கூறியுள்ளார்.
அதைபோல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயண விவரம் அறிவித்துள்ளார். அதன்படி மே 16-ம் தேதி கன்னியாகுமரி, 17-ம் தேதி தூத்துக்குடி, 18-ம் தேதி திருநெல்வேலி மற்றும் விருதுநகரில் பயணம் மேற்கொள்கிறார். ஜூன் 8-ம் தேதி திருப்பூர், ஜூன் 9-ம் நீலகிரிலும், ஜூன் 10-ம் தேதி கோவை மாவட்டத்தில் கமல்ஹாசன் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.