February 21, 2018
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்யம் உயர்மட்டகுழு உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மதுரையில் இன்று தனது அரசியல் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் உயர்மட்டகுழு உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மகேந்திரன், அருணாசலம், பேரா.கு.ஞானசம்பந்தன்,சுகா தங்கவேலு , பாரதி கிருஷ்ணக்குமார், நடிகை ஸ்ரீப்ரியா, ராஜ்குமார்,கமீலா நாசர்,சவுரிராஜன்ராஜசேகரன்,சி.கே.குமாரவேல்,மூர்த்தி,மவுரியா,ராஜநாராயணன்,ஆர்.ஆர்.சிவா ஆகியோர் மக்கள் நீதி மய்யம் உயர்மட்டகுழு உறுப்பினர்களாக அறிவிக்கபட்டுள்ளனர்.