March 12, 2021
தண்டோரா குழு
ஊழலின் சின்னமாக கோவையில் பல அரசியல்வாதிகள் இருக்கின்றனர். அதை உடைக்க வேண்டிய கடமை இருக்கின்றது என கோவையில் ம.நீ.ம.துணைத்தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள் யாரோ அவர்கள்தான் ஊழலின் சின்னம். அதிமுக.தான் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கின்றது என மக்கள் நீதி மய்யம் அமைப்பின் துணை தலைவரும் அக்கட்சியின் சிங்காநல்லூர் வேட்பாளருமான மகேந்திரன் கோவை விமான நிலையத்தில் பேட்டி
கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் அமைப்பின் துணை தலைவரும் அக்கட்சியின் சிங்காநல்லூர் வேட்பாளருமான மகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் போட்டியிடுகின்றார்.பிரச்சாத்தை துவங்க ஆர்வமாக இருக்கின்றோம்.மக்கள் நீதி மய்யத்தின் கோட்டையாக மேற்கு மண்டலம் மாற்றப்படும்.கோவை மக்கள் பல மாற்றத்தின்
முன்னோடியாக இருப்பவர்கள் அரசின் உதவி இல்லாமல் பல நல்ல காரியங்களை கோவை மக்கள் செய்துள்ளனர். பொள்ளாச்சி சம்பவம் போல பல இடங்களில் நடைபெற்றுள்ளது. வளர்ச்சிக்கான உதவி இல்லாமல் வளர்ந்த நகரம் கோவை என்பதால் இங்கு போட்டியிடுமாறு கமலை கேட்டுக்கொண்டோம் கடந்த மக்களவை தேர்தலில் மக்கள் ஆதரவு கொடுத்த பல தொகுதிகளில்
இதுவும் ஓன்று.
மக்கள் இந்த மாற்றத்திற்கு உதவுவால்கள் கோவை மாவட்டத்தில் பல தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்திற்கு வெற்றி வாய்ப்பு உண்டு கறை பட்ட கையுடன் கைகோர்க்க மாட்டோம். மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கின்றோம் உழலின் சின்னமாக கோவையில் பல அரசியல்வாதிகள் இருக்கின்றனர். அதை உடைக்க வேண்டிய கடமை இருக்கின்றது கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள் யாரோ அவர்கள்தான் ஊழலின் சின்னம்.அதிமுகதான் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கின்றது.வேட்பு மனு தாக்கல் தேதி முடிவு செய்ய வில்லை. வரும் புதன் கிழமைக்குள் ஏதோ ஒரு நாள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.