• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் காட்டும் அன்பில் கண் கூசும் அளவுக்கு டார்ச் லைட் ஒளிர்கிறது – கமல்

April 8, 2019 தண்டோரா குழு

மூன்றாம் அணிக்கான மனபாங்கு வந்துவிட்டது என்றும் நாடெங்கிலும் உள்ள பெரும் தலைவர்கள் மூன்றாம் அணி குறித்து யோசிக்கிறார்கள் என தெரிவித்தார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் கோவை நாடாளுமன்ற மன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கையைமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ,இன்று
வெளியிட்டார். கோவை 2024 , கோவை வழிநடத்தும் தமிழகத்தை என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையை அக்கட்சியின் பொது செயலாளர் அருணாச்சலம் பெற்றுக் கொண்டார்.

இது குறித்து பேசிய அக்கட்சியின் துணை தலைவரும் கோவை வேட்பாளருமான மகேந்திரன்,

புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை நிறை வேற்றப்படும், ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதமாக குறைக்கப்படும், சிறு குறு தொழில் மேம்பாடு, திறன் மேம்பாடு மையம் உள்ளிட்ட 24 திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை குறிப்பிட்டார். மனித விலங்கு மோதல், நீர் நிலைகளின் மறுசீரமைப்பு, நகர்புற காடு வளர்புத் திட்டன் , கழிவு மேலாண்மை இடம்பெற்றுள்ளதையும் சுட்டிகாட்டினார்.

இந்த திங்கள் 5 ஆண்டுகளுள் முடிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சாத்தியமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கமல், எந்த திட்டமும் சொன்ன படிப்செய்து முடிக்கப்படாத காரணத்தால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு திட்டம் சாத்தியம் என்ற நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம், இந்த மனநிலைக்கு தமிழகமே வந்துவிட்டது என்பது தான் சோகம் என தெரிவித்தார்.மேலும், இந்த சிஸ்டம் கெட்டுவிட்டது, இது கெடுத்தது நாம் எனக் தான கெடுத்தோம், கேள்வி கேட்காமல் இருந்த ஆணவத்தில் இருக்கிறார்கள். அகற்ற வேண்டியதை தூக்கி போட்டுவிட்டால் நல்ல ஆரோக்கியமான விசியத்தை செய்யலாம்.இந்த திட்டங்கள் சாதியமா என கேட்கிறீர்கள், இது சாத்தியம் என உங்களை நம்ப்ப வைக்க வேண்டியது எங்கள் முதல் வேலை.
ஒவ்வொரு தொகுதிக்கும் தனி தனி தேர்தல் அறிக்கை மூலம், அடிமட்டத்தில் இருந்து வளர்ச்சியை முன்னெடுப்போம். இப்போது நாலு மண்டலத்திலும் எங்களுக்கு தலைமை இடம் இருக்கு, மக்களை தேடி தலைமை வந்து உள்ளது.

நான் நடிகனாக என் தகுதிக்கு மீறிய நிறைய அன்பை மக்களிடம் பெற்றுவிட்டேன்.இப்போது மக்களிடம் சென்று பார்க்கும் போது இந்த 60 வருடங்களில் அனுபவிக்காத அன்பை இப்போது அனுபவிக்கிறேன். ஒவ்வொரு சிற்றூருக்கும் செல்லும் போதும் மக்கள் காட்டும் அன்பை பார்க்கும் போது கண் கூசும் அளவுக்கு டார்ச் லைட் ஒளிர்கிறது. இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் அமைவதில் இழுபறியாக தான் இருக்கும், அதற்கு ஒரு காரணமாக மநீம இருக்கும். தமிழகத்தை முன்னாடி மாநிலமாக தூக்கி வைப்போம், இதே போல ஒவ்வொரு மாநிலமும் செய்தால் புத்தம் புதிய பிரதமர் உருவாகுவார். மூன்றாவது பிரதமர் வேட்பாளர் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.தேசிய அரசியலில் ஆர்வம் உள்ளது. எங்க வீடு தமிழகம், அதை தான் முதலில் சுத்தம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

மேலும்,ஒரு புரட்சியின் விழும்பில் தமிழகம் இருப்பதாகவும் அதில் அனைவரும் பங்கு பெற வேண்டும்.மூன்றாவது அணி வந்தே தீரும் என நம்பிக்கை உள்ளது.மூன்றாம் அணிக்கான மனபாங்கு மக்களிடம் வந்துவிட்டது. நாடெங்கிலும் உள்ள பெரும் தலைவர்கள மூன்றாம் அணி குறித்து யோசிக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் படிக்க