• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் பாரதிய ஜனதா கண்டு கொள்ள மாட்டார்கள் – சசிகாந்த் செந்தில்

July 31, 2023 தண்டோரா குழு

கோவையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதற்கு வக்கீல் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் அழகுஜெயபால் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டு பேசியதாவது:

காங்கிரஸ் என்பது கட்சி இல்லை. அது ஒரு மக்கள் இயக்கம். தற்போது நமது நாடுr பாசிச பிடியில் உள்ளது. நாம் அடுத்த ஆண்டில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் இனிமேல் நமது நாட்டில் தேர்தல்R ஒன்றே இருக்காது. பாரதிய ஜனதாவை அனுசரித்து செல்லக்கூடிய கட்சிதான் இருக்கும் என்ற நிலை வந்துவிடும்.

மக்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அதை கண்டுகொள்ள மாட்டார்கள். அதற்கு தற்போது மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் சம்பவமே சாட்சி. எனவே நாம் நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை மறந்துவிட்டு மக்களை சந்திக்க வேண்டும். நமக்குள் ஒற்றுமை இல்லை என்றாலும் நமது சித்தாந்தம் ஒன்றாகதான் இருக்கிறது. நாம் நமது சித்தாந்தத்தை மறக்கக்கூடாது.

கட்சிக்குள் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம், போட்டிகள் இருக்கலாம். ஆனால் நாம் தலைவர்களுக்காக இல்லாமல் நமது சித்தாந்தத்தை நோக்கி செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களை சந்திக்க முடியும், வெற்றியையும் பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ராம்கி, சாய்சாதிக், காட்டூர் சோமு, கணேசன், எம்.எஸ். பார்த்திபன், சிங்கை செந்தில், ராஜா பழனிசாமி, வெற்றிலை கருப்புசாமி, காந்தன், கார்த்திக், காமராஜ் துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க