March 6, 2018
தண்டோரா குழு
மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைக்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர்.சிலையை திறந்து வைத்தார். பின், எம்.ஜி.ஆரின் சிலையைத் திறந்துவைத்த நடிகர் ரஜினிகாந்த், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சிலைத்திறப்புக்குப் பின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய , நடிகர் ரஜினிகாந்த்,எனக்காக சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களால் இடையூறு ஏற்பட்டிருந்தால், மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்.மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.