• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகேந்திரன் முன்பே திமுகவில் இணைந்து இருந்தால் கோவையில் திமுக வெற்றி பெற்றிருக்கும் – முதல்வர் முக.ஸ்டாலின்

July 8, 2021 தண்டோரா குழு

மகேந்திரன் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இணைந்து இருந்தால் கோவையில் திமுக வெற்றி பெற்றிருக்கும் என முதல்வர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத்தலைவராக இருந்தவர் மகேந்திரன். கமல்ஹாசன் கட்சி தொடங்கிய நிலையில் இருந்தே அவருடன் பயணித்தார். பின்னர் சட்டமன்றத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை சந்தித்தது. அதில், கமல்ஹாசன், மகேந்திரனும் கூட தோல்வியை சந்தித்தனர்.

இதற்கிடையில், அண்மையில் மகேந்திரன் ம.நீ.ம கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் திமுகவில் இணைந்தார்.

அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

“கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிபெறாதது வருத்தமளிக்கிறது. மகேந்திரன் முன்பே வாந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்கும். தேர்தலை அறிவித்தபோதே மகேந்திரனை எதிர்ப்பார்த்தேன். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் உள்ளிட்டோர் கிடைத்திருக்கின்றனர்” என்றார்.

மேலும் படிக்க