மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி நகரை சேர்ந்த சோனல் பாபர்வாளுக்கு விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா ஸ்காலர்ஷிப் விருது கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி நகரை சேர்ந்தவர் சோனல் பாபர்வால்(21). அவருக்கு ஐயர்லாந்து நாட்டின் Cork Institute of Technology பல்கலைக்கழகம் வழங்கும் சர்வதேச விண்வெளி ஸ்காலர்ஷிப் விருது கிடைத்துள்ளது.
இந்த சர்வதேச விண்வெளி பல்கலைக்கழக ஸ்காலர்ஷிப் இந்திய அமெரிக்க விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவை கௌரவிப்பதற்காக நிறுவப்பட்டது. அவர் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி கொலம்பியா விண்கலத்தில் நேர்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து சர்வதேச விண்வெளி பல்கலைக்கழக அதிகாரி மைகேல் பாட்டர் கூறுகையில், “இந்திய விண்வெளி, தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்பாடுகளில் முன்னேற்றம் அடைந்துக்கொண்டு இருப்பதால், இந்திய சர்வதேச அளவில் முக்கியமானதாக இருக்கிறது. வலுவான தலைமை குணங்களை வளர்த்துக்கொள்வதிளும் ஐ.எஸ்.யு விண்வெளி ஆய்வு திட்டத்தில் பங்கேற்க இந்திய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
மேலும் கல்பனா சாவ்லா போல், விஞ்ஞானம் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பற்றிய ஆர்வம் கொண்ட மாணவகளையும், அறிவியல், மருத்துவம் மற்றும் விண்வெளி குறித்த பாடங்களை படித்த இந்திய பட்டத்தாரிகளின் கவனத்தையும் ஈர்ப்பதே இந்த ஸ்காலர்ஷிப்பின் நோக்கம் ஆகும்”” என்றார்.
“சோனலின் சிறந்த கல்வி சாதனை மற்றும் நேர்முக கானலில் அவர் காட்டிய செயல்திறனும் தான் சோனலுக்கு இந்த ஸ்காலர்ஷிப் கிடைக்க உதவியது”” என்று அவருடைய தோழி அபூர்வா தெரிவித்தார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது