• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்

November 12, 2019 தண்டோரா குழு

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின. பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதம் காட்டியது. ஆனால் பா.ஜ அதற்கு மறுத்துவிட்டது.

இதற்கிடையில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பெரும் கட்சியான பாஜ.வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய பலம் இல்லாததால் பாஜ அதற்கு மறுத்து விட்டது. அதன்பின் இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று இரவு 7.30 மணிக்குள் முடிவை தெரிவிக்கும்படியும் ஆளுநர் கூறியிருந்தார். இதைதொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா வெளியேறியது. மேலும், உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. தொடர்ந்து சிவசேனா கட்சியினர், ஆட்சி அமைக்க கால அவகாசம் கோரினர். ஆனால், அதற்கு ஆளுநர் மறுத்துவிட்டார். தொடர்ந்து தேசியவாத காங்கிரசுக்கும் ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால், அக்கட்சி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த சூழலில் மஹாராஷ்டிராவில், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததாலும், சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்தும், மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார். இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார். இதனையடுத்து, மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க