• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளை கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை

January 17, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் மகளை கொலை செய்த வழக்கில் தாய் பர்வீனுக்கு மரணதண்டனையும் சகோதரர் அனீஸுக்கு ஆயுள்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை(ஜனவரி 17) கூறியதாவது:

“பாகிஸ்தானில் உள்ள லாகூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீன் பிபி. இவரது மகள் ஜீனத் ரபிக்(வயது 18). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினர் அனுமதியின்றி ஹசன் கான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெற்றோர் வீட்டிற்கு செல்லாமல் கணவனுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் பாரம்பரியத்தின்படி திருமண வரவேற்பு விழா நடத்தவேண்டும் என்று ஜீனத்தை வீட்டிற்கு அழைத்து வந்த அவரது தாய் ஜீனத்தை தாக்கியுள்ளனர். ஆத்திரம் அடங்காத தாய் பர்வீன் ஜீனத் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றுள்ளார்.

ஜீனத்தின் உடலை வாங்க அவளுடைய குடும்பதில் வேறுயாரும் முன்வரவில்லை. தீயில் கருகிய அவளுடைய உடலை கணவன் வீட்டார் உடலை அடக்கம் செய்தனர்.

இது தொடர்பாக ஜீனத்தின் தாய் பர்வீன் மற்றும் சகோதரர் அனீஸ் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்ற நீதிபதிகள் பர்வீனுக்கு தூக்கு தண்டனையும் அனீஸுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க