• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளிர் தினத்தை முன்னிட்டு டூடுல் வெளியிட்ட கூகுள்

March 8, 2017 தண்டோரா குழு

சர்வதேச மகளிர் தினம் நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கவுரவிக்கும் விதமாக டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள்.

கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில், “ பாட்டி ஒருவர் தனது பேத்திக்கு மறக்க முடியாத 13 பெண்களை பற்றிய கதைகளை கூறுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்லைட் ஷோ வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த டூடுல் 13 பெண்களின் சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கூகுள் கவுரவித்துள்ள பெண்களின் பட்டியலில் அமெரிக்க பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலருமான இடா வெல்ஸ், மெக்சிகோ ஓவியர் பிரிடா கஹ்லோ, இத்தாலி – பிரேசிலைச் சேர்ந்த கட்டுமானத்துறை நிபுணரான லினா போ பரடி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த நாட்டிய கலைஞரும், நடன ஆசிரியருமான ருக்மணி தேவியும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் படிக்க