• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகளிர் சுய உதவி குழுக்களிடம் கடன் தொகையை திரும்ப செலுத்த நிர்பந்தம் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

June 8, 2021 தண்டோரா குழு

முழு ஊரடங்கு காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களிடம் கடன் தொகையை திரும்ப செலுத்த நிர்பந்தம் செய்யும் தனியார் வங்கிகள் மற்றும் நுண்நிதி கடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில்
முழு ஊரடங்கு கடந்த 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோவை
மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய கடன் தவனை தொகையை திரும்ப செலுத்த கேட்டு நிர்பந்தம்செய்து வருவதாக பல்வேறு இடங்களிலிருந்து புகார்கள் வருகின்றன.

கொரானா பரவும் இச்சூழலில் மகளிர் சுய உதவி குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டு இக்கட்டான காலகட்டத்தில் உள்ளனர். எனவே, அவர்களது கடனுக்கான தவணை தொகையை வசூலிக்க நிர்பந்தம் செய்வதை தவிர்த்து கால அவகாசம் வழங்கி கூடுதல் வட்டி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட அளவில் திட்ட இயக்குநர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், உதவித்திட்ட அலுவலர்கள்
(மகளிர் திட்டம்) மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் திரும்ப செலுத்தும் கால அட்டவனையை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி
நிறுவன பணியாளர்கள் வெளியூர் நபர்களாக இருப்பதாலும், கடன் தொகை வசூல் செய்வதற்காக அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதாலும் இவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவ
வாய்ப்புள்ளது.

எனவே இது தொடர்பாக எந்த புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்படவும், இதையும் மீறி புகார்கள் ஏதேனும் மாவட்டத்தில் எழும்பட்சத்தில் இச்செயல் தற்போது அரசு விதித்துள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறிய செயலாக கருதப்பட்டு தொடர்புடைய அனைத்து தனியார் வங்கிகள், நுண் நிதி கடன் நிறுவனங்கள் மற்றும்தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க