February 6, 2018
தண்டோரா குழு
மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்க தமிழக அரசு ரூ.25,000 மானியம் வழங்குகிறது.இந்த மானிய விலை ஸ்கூட்டர்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்தது.
மேலும்,மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளை மிகக் குறைந்த காலக் கட்டத்தில் பெற முடியாத நிலையில், பல பெண்கள் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வலியுறுத்தினர்.
இதனையடுத்து மானிய விலை ஸ்கூட்டர்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.