• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகளின் பிரேதத்தை சுமந்து சென்ற தந்தை

January 7, 2017 தண்டோரா குழு

அமரர் ஊர்தி கிடைக்காததால் இறந்த மகளைத் தோளில் தூக்கிக் கொண்டு 15 கிலோமீட்டர் நடந்த சம்பவம் ஓடிஸா மாநிலத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிஸா மாநிலத்தில் உள்ள அங்குல் மாவட்டத்தை சேர்ந்த கட்டி தர்பார் என்பவர் காய்ச்சலால் அவதியுற்ற தனது 5 வயது மகள் சுமியை அருகில் உள்ள பலஹாரா சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவள் இறந்துவிட்டாள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த மகளை வீட்டிக்கு எடுத்துச்செல்ல பொருளாதார வசதி இல்லாததால் அமரர் ஊர்தி கேட்டுள்ளார். ஆனால், அது தரப்படவில்லை. இதையடுத்து இறந்த மகளைத் தோளில் சுமந்துகொண்டு 15 கிலோமீட்டர் நடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார் அவர்.

இது குறித்து கட்டி தர்பார் செய்தியாளர்களிடம் வெள்ளிக் கிழமை (ஜனவரி 6) கூறுகையில், “காய்ச்சலால் அவதியுற்ற சுமியை பலஹாரா சுகாதார நிலையத்தில் சேர்த்தேன். ஆனால், சிகிச்சை பலனின்றி அவள் இறந்துவிட்டாள் என்று மருத்துவர்கள் கூறினர். அதன் பிறகு அவளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு சுகாதார ஊழியர்கள் கூறினர். அரசின் இலவச அமரர் ஊர்தியை தர மறுத்துவிட்டனர். இதனையடுத்து என்னுடைய கிராமத்தின் இடுகாட்டுக்கு இறந்த மகளை தோளில் சுமந்துகொண்டு 15 கிலோ மீட்டர் நடந்தேன்” என்றார்.

இது குறித்து பலஹாரா சுகாதார நிலையத்தின் மருத்துவ அதிகாரி கூறுகையில், “இச்சம்பவம் குறித்து ஊடகங்கள் மூலம்தான் தெரிய வந்தது. இது போன்று இறந்தவர்களின் உடல்களில் எடுத்து செல்லக் கூடாது என்று ஊழியர்களுக்குக் கட்டளையிட்டுள்ளேன். ஒவ்வொரு சம்பவத்திற்கும் நான் பாதுகாவலனாக இருப்பேன் என்று எதிர்பார்க்கக்கூடாது. இது குறித்து விசாரிக்க கட்டளையிட்டுள்ளேன்” என்றார்.

ஓடிஸா மாநிலத்தில் நவீன் பட்நாயக் அரசு, கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ‘மகா பிரையன்’ திட்டத்தின் கீழ் இலவச பாடை சேவையை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு பொருளாதார வசதி இல்லாத மக்கள் இறந்த குடும்பத்தினரைத் தோளில் சுமந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது.

இந்தச் சம்பவம் முதல் நிகழ்வு அல்ல ஓடிஸா மாநிலத்தில் கட்டி தர்பாருக்கு நடந்த இந்த கொடுமையான சம்பவம் முதலாவது அல்ல. கடந்த ஆண்டு இதே மாநிலத்தில் இறந்த மனைவியின் உடலை சுமந்து கொண்டு 13 கிலோ மீட்டர் நடந்த சம்பவம் இந்தியாவின் கவனத்தை திருப்பியது. அதே போல சரத் பாரிக் என்பவர் இறந்த தந்தையின் உடலை சுமந்து சென்ற சம்பவமும் அங்கேதான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க