• Download mobile app
18 Jan 2026, SundayEdition - 3630
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப்ளோரிடா கடற்கரையில் ஒதுங்கும் நீல நிற ஜெல்லி மீன்கள்.

April 8, 2016 60abc.com

கடல் நீல நிறமாகக் காணப்படுவது உண்டு ஆனால் கடற்கரையை நீல நிறத்தில் பார்த்தது உண்டா? இதோ ப்ளோரிடா மாநிலத்தின் கடற்கரை பகுதி நீல நிறத்தில் காணப்படுகிறது. எதனால் என்று பார்ப்போம்.

அமெரிக்க தேசத்தில் உள்ள ப்ளோரிடா மாநிலத்தில் காணப்படும் ஹள்ளண்டாலே கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் கரையோரம் வந்து குவிந்ததால் அந்தக் கடற்கரை முழுவதும் நீல நிறத்தில் காணப்பட்டது.

நீல நிறத்தில் உள்ளங்கை அளவில் உள்ளத்தால் இந்த ஜெல்லி மீன்களை ஊதா மாலுமிகள் என்று அழைக்கப்படுகிறது. கரையோரம் சேர்ந்த இந்த மீன்களால் மனிதர்களுக்குத் தீங்கு இல்லை. சூரிய குளியல் எடுக்கும் மக்கள் இவற்றைக்கண்டு பயப்பட தேவை இல்லை என்று கூறப்பட்டாலும், சூரிய குளியலில் ஈடுபட அங்கு இடமே இல்லாததுதான் அவர்களது பிரச்சனை எனத் தெரிவித்துள்ளது.

கடற்கரை முழுவதும் இந்த அதிசய உயிரினங்களால் மூடப்பட்டு உள்ளது. ஆபத்தான கடல் வாழ்க்கைக்காக ஊதா கொடி பறக்கவிடப் படுகிறது என்றும், இந்தச் சம்பவம் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என்றும் சமுக வலைதமான பேஸ்புக்கில் நகரத்தின் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் ஜெல்லி மீன்கள் வழக்கமாகக் கடல் மேற்பரப்பில் மிதக்கும் என்றும், பின்னிணைப்பைப் பயன்படுத்தி அவை நீரில் பரவி இருக்கும் என்றும் jellywatch என்ற அமைப்பு தெரிவிக்கிறது. இந்த நீல நிற ஜெல்லி மீன்கள் மனிதர்களைக் கொட்டாது என்றாலும் மனித கொல்லி என்று அழைக்கப்படும் ஜெல்லி மீன்கள் இந்த நீல மீன்களுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள் கடற்கரையை சுத்தம் செய்ய செய்ய மேலும் நீல நிற ஜெல்லி மீன்கள் கரையோரம் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வேலை விரைவில் முடியும் என்றும் மேலும் மீன்கள் இவ்விடம் வராத வரையில் சூரிய குளியல் செய்ய நினைக்கும் மக்கள் கொஞ்சம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் படிக்க