• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப்ரோசோன் மாலில் செப்டம்பர் 26 முதல் நவராத்திரி கொண்டாட்டங்கள்

September 24, 2022 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ளது ப்ரோசோன் மால். இம்மாலில் வரும் பண்டிகை காலங்களை கொண்டாடும் விதமாக விழாக்கால விற்பனை தொடங்கியுள்ளது.

இது குறித்து ப்ரோசோன் மாலின் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) பி. பாபு, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்க தலைவர் முசாமில், செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் சி.முரளி ஆகியோர் கூறியதாவது :-

இந்தியாவில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகளில், தீபாவளி மற்றும் நவராத்திரி மிக பிரம்மாண்டமான ஒன்றாகும். இந்தியாவின் மற்ற பண்டிகைகளைப் போலவே, நவராத்திரியும் திருவிழா கொண்டாடுவதற்கும் பல கொள்கைகள் இருக்கிறது. நவராத்திரி விழா காலங்களை முன்னிட்டு கோயம்புத்தூர் மக்களை கவரும் வகையில் வண்ண வண்ண விளக்குகளின் அணிவகுப்போடும், அலங்காரத்தோடும், ப்ரோசோன் மால் ஜொலிக்கவைக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 தேதி வரை நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளது.

இந்த ஒன்பது நாட்களும் கண்கவர் அலங்கார விளக்குகளும், நவராத்திரி கொலு மொம்மைகளும், அதன் கூடவே கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டங்களில் முக்கிய அம்சமாக அக்டோபர் 1 முதல் 5 வரை தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நவராத்திரி தாண்டியா மற்றும் கர்பா நடனங்களும், குழந்தைகளுக்கான பாட்டு போட்டிகள், பேன்சி டிரஸ் போட்டிகள், பேமிலி பேஷன் ஷோ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் என கோவை மக்களை மகிழ்விக்க தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்த விழாக் காலங்களை முன்னிட்டு 135-க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளின் சலுகைகள் மற்றும் புதிய ரகங்கள்களின் வருகைகள் என மக்களை மகிழ்விக்க இந்த விழா நடைபெற உள்ளது. இந்த நவராத்திரி மற்றும் தீபாவளி விற்பனை கொண்டாட்டங்களை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு ப்ரோசோன் மால் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க