• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ப்ரணா’ புதிய எலக்ட்ரிக் பந்தய வகை பைக் அறிமுகம்

January 25, 2021 தண்டோரா குழு

‘ப்ரணா’ புதிய எலக்ட்ரிக் பந்தய வகை பைக் அறிமுகம்-கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி முதல் விநியோகத்தை துவக்கி வைத்தார்.

பந்தய வகை மோட்டார் சைக்கிளாக ப்ராணா தற்போது சுற்றுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு ஏற்படாத வகையில் புதிய எலக்ட்ரிக் பந்தய வகை பைக் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுகம் மற்றும் முதல் விநியோகம் துவக்க விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு புதிய எலக்ட்ரிக் பந்தய வகை பைக்கின் விழிப்புணர்வு குறித்து பேசினார். அதனை தொடர்ந்து முதல் விநியோகத்தை துவக்கி வைத்தார்.

ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (பி) லிமிடெட், இந்தியாவில் வெற்றிகரமான ஸ்டார்ட் அப் ஆக உள்ளது. கோவையில் ஏற்கனவே உள்ள உற்பத்தி தொழிற்சாலையை மேம்படுத்தி, தொடங்கியுள்ளது. இந்தியாவில் இந்த தொழிற்சாலையை தொடங்கியுள்ள கோவையை சேர்ந்த பொறியாளர் மோகன்ராஜ் ராமசாமி, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவின் டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இந்த நிறுவனம், தற்போது ஒரு கம்பீரமிக்க மின்சார வாகனமாக, பந்தய வகை மோட்டார் சைக்கிளாக ப்ராணா-வை, முதல் தயாரிப்பாக அறிமுகம் செய்துள்ளது.

பாரத் நிலை மாசுக்கட்டுப்பாட்டில் ப்ராணா (பிஎஸ் இன்பினிட்டி) யில் பூஜ்ஜியமாக பெற்றுள்ளது. புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள், பல்வேறு காரணங்களால் பல்வேறு வகைகளில் சிறப்புத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. மின்சார வாகனம் என்பதால், சுற்றுச் சூழல் மாசுபடுத்தாத வாகனமாகவும், பயணிப்போரின் பாதுகாப்பாகவும், காற்று தடையை குறைக்கும் ஏரோடைனமிக் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. பந்தய திறன் முறையில் மணிக்கு 123 கி.மீ.,வேகத்தில் செல்லும். நான்கே நொடியில் மணிக்கு 60 கி.மீ.,வேகத்தை எட்டும்.

ஏற்கனவே கோவையில் சிறந்த அனுபவங்களை கொடுத்து வரும் ப்ரணா, விரைவில் மதுரை, திருப்பூர், பாண்டிச்சேரி, கோழிக்கோடு மற்றும் திண்டுக்கல், பெங்களூரு நகரங்களில் தாயாரிப்பு வசதிகளுடன் அறிமுகமாகவுள்ளது. ப்ரணா வாகனத்தை பெற ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். இந்த வாகனத்தின் ஆன்ரோடு விலை ரூ.2 முதல் 2.2.5 லட்சமாக இருக்கும். இதன் மின்சார மோட்டார் 35என்எம் திறனையும், 160 கிலோ எடையையும் கொண்டதாக உள்ளது.

மேலும் படிக்க