• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலீஸ்காரர்கள் எப்.ஐ.ஆர் போடபயப்படவே கூடாது – ஐஜி பொன்.மாணிக்கவேல்

November 29, 2018 தண்டோரா குழு

தனக்குகொடுக்கபட்டவேலையைசரியாகமுடித்ததிருப்திஇருக்கிறது. “இளைஞர்களைநம்பிஎன்பணியைவிட்டுச்செல்கிறேன்”அவர்கள்மீதுஎனக்குநம்பிக்கைஉள்ளது என ஐ.ஜிபொன்.மாணிக்கவேல்விழாவில்உருக்கமாககூறியுள்ளார்.

ரயில்வே காவல்துறை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அவருக்கு சென்னை அயனாவரத்தில் பிரிவு உபசரிப்பு விழா இன்று நடைபெற்றது.

அவ்விழாவில் பேசிய ஐஜி பொன்.மாணிக்கவேல்,

ஒருகுற்றம் நடந்துவிட்டால், அந்தபகுதியில் முழுமையாக இறங்கி விசாரணையை ஆரம்பிக்கவேண்டும். தவறு என்று தெரிந்துவிட்டால் உடனே நீதிமன்ற அனுமதிபெற்று கைது செய்துவிட வேண்டும். இதுசம்பந்தமானவழக்குகள், சட்டங்களை எல்லோரும் தெரிந்துவைத்துகொள்ள வேண்டும். அடிக்ககூடாது எப்ஐஆர் போட போலீஸ்காரர்கள் பயப்படவேகூடாது. எப்பவுமே குற்றவாளிகள் வாக்குமூலம் தந்தால் அதை உடனே ஒருபேப்பர்ல எழுதிவைச்சிக்கணும். அப்போதான் அதுசாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும். குற்றவாளியை அடிக்கிறதால உண்மையை வரவழைக்க முடியாது.

சாப்பாடு கொடுத்தேன் நான்கூடகேஸ் நடத்தினேன். அப்போ குற்றவாளியை கூப்பிட்டு விசாரணைநடத்தும் போது அவருக்கு ஒரு சேர் கொடுத்து உட்காரவச்சேன். நான் சாப்பிட்ட சாப்பாட்டை தான் அவருக்கும் கொடுத்தேன். எனக்கிருக்கும் எல்லா வசதிகளும் அவருக்கும் இருக்கிற மாதிரி தான் பார்த்துக்கிட்டேன். ஆனால், ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அதுக்குபதிலா, இதுவரை அவர் செய்த தவறுகளை எல்லாம் அவருக்கு எடுத்துகாட்டி அதுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் சட்டத்தில் கிடைக்கும் என்பதையும் எடுத்துசொல்லி 15 நிமிஷம் டைம் கொடுத்தேன். அப்பறம் அவராகவே என் கிட்டவந்து ஒன்னு விடாமல் இதுவரை செய்த தவறுகளை என்னிடம் மளமளவென சொல்லி குற்றத்தைஒப்புக்கொண்டார்.

திருத்தமுடியும்:

”என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களையும் நம்பிவிட்டு செல்கிறேன். இளைஞர்கள் போலீஸ்காரர்கள் நினைத்தால் ஒருகுற்றவாளியை ஆறேமாசத்தில திருத்தமுடியும். அந்தஅளவுக்குகடமைகள்அதிகம்”

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க