• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலி தங்க நகையை அடகு வைத்து ஏமாற்றிய நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்

November 13, 2024 தண்டோரா குழு

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் சிறு நிதி நிறுவனத்தின் மேலாளராக பணிபுரியும் ஜெபசீலன் சாம்ராஜ் (37) என்பவர் கொடுத்த புகாரில் கடந்த ஆண்டு கிளை மேலாளர் ரஷ்யா பேகம்,நகை மதிப்பீட்டாளர் நிசாந்தினி மற்றும் பிரதிநிதி ராஜலட்சுமி ஆகியோர்களுடன் சேர்ந்து குமரேசன், நாகதர்ஷினி,சரவணன் என்பவர்கள் சிறு நிதி நிறுவனத்தில் 505.95 கிராம் தங்க நகைகளை ரூபாய் 21,90,047 /- அடகு வைத்துள்ளனர்.

அந்த நிறுவனத்தின் தணிக்கையின் போது அவர்கள் வைத்த 505.95 கிராம் நகையில் 205.93 கிராம் நகை போலி நகை என்பது தெரியவந்ததின் பேரில்.இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். இப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன்,உத்தரவின் பேரில் *மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் புலன் விசாரணை செய்து நிதி நிறுவனத்தில் ஏமாற்றிய குமரேசன், நாகதர்ஷினி ஆகியோர்களை இன்று (12.11.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேலும் இது போன்று மோசடி குற்றங்களில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க