• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போலி இ பாஸ் மூலம் ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த பேருந்து பறிமுதல்

June 23, 2020 தண்டோரா குழு

ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு போலி இ – பாஸ் மூலம் பல மாநிலங்களை கடந்து வந்த சொகுசு பேருந்தை கருமத்தம்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.மாநில,மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இரவு,பகலாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை – திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியான கருமத்தம் பட்டியில் சோதனைச்சாவடியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காவல் துறையினர் ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.சொகுசுப்பேருந்தில் வந்த 30 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் போலி இ – பாஸ் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து போலி இ – பாஸ் மூலம் கோவை வந்த சொகுசுப்பேருந்தை பறிமுதல் செய்தனர். பேருந்தில் வந்த 30 பேருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும்,பல மாநில எல்லைகளை கடந்து சொகுசுப்பேருந்து எப்படி கோவை வந்தது ? போலி இ – பாஸ் பெற்றது எப்படி ? என்பது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே போலி இ – பாஸ் பெற்று விருதுநகர் வரை சென்ற ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கோவை சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பெற்றது கண்டறியப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போலி இ – பாஸ் மூலம் கோவை வந்த சொகுசுப்பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க