April 4, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பந்த் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மாலை கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து அவிநாசி சாலையில் உள்ள கடைகள், மற்றும் வணிக நிறுவனங்கள், வாகனங்களில் சென்றோர் அனைவருக்கும் நாளை நடைபெறும் கடையடைப்பை வலியுறுத்தி எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில்,திமுக,காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக நடந்து சென்று நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.
மேலும்,நாளை நடைபெறும் கடையடைப்பு அறவழிப் போராட்டத்திற்கு பொது மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளோம் என்று கூறினார்.