April 11, 2018
தண்டோரா குழு
சென்னையில் நடக்கவிருந்த அனைத்து ஐ.பி.எல்.போட்டிகளும் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.இதற்கிடையில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மேலும், சென்னையில் ஐபிஎல் போட்டியை நடக்க விடமாட்டோம் என தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.
சென்னையில்,நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியின் போது தீவிர போராட்டம் நடத்தப்பட்டது.பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தான் நேற்று போட்டி நடைபெற்றது.இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள போட்டிகள் அனைத்தையும் வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது குறித்து மத்திய உள்துறை செயலகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.இதனால் சென்னையில் நடைபெறவிருந்த கொச்சி, விசாகபட்டினம் அல்லது கர்நாடக மாநிலத்திற்கு ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படலாம் என தெரிகிறது.
மேலும்,சி.எஸ்.கே-வுடன் இதர அணிகள் மோதும் 7 போட்டிகளை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது. ஒரு போட்டி முடிந்துள்ள நிலையில் எஞ்சிய 6 ஐபிஎல் போட்டிகளும் இடமாற்றம் செய்யப்படவுள்ளன.