February 12, 2020
தண்டோரா குழு
தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி, சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி, ட்விட்டரில் காட்டமாக பதிலளித்துள்ளார்.
நெய்வேலியில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்தபோது, வருமான வரித்துறையினர் பிகில் படத்தில் வாங்கிய சம்பளம் குறித்து நேரில் விசாரணை நடத்தினர். அதுமட்டுமின்றி, ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், திரையரங்குகள், விஜய்க்கு சொந்தமான வீடுகள் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீடுகள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.
இதற்கிடையில் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. அதில் விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், சினிமாத்துறையினரை கிறிஸ்துவ மதத்தின் பக்கம் மாற்றும் நோக்கில் அவர்கள் சிலரால் இயக்கப்பட்டுவருவதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி, “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா…” என குறிப்பிட்டு காட்டமாக பதில் அளித்துள்ளார்.