February 10, 2021
தண்டோரா குழு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ் பாலிவுட் ஹாலிவுட் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், தனுஷ் போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்ட இருக்கிறார்.போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ், மருமகன் தனுஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.பூமி போஜை நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.