• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போத்தனூர் – பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

March 24, 2017 தண்டோரா குழு

போத்தனூர் – திண்டுக்கல் அகலரயில் பாதை திட்டத்தின் இறுதி கட்டமாக போத்தனூர் பொள்ளாச்சி இடையே அமைக்கப்பட்ட பாதையில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

கோவை போத்தனூரில் இருந்து திண்டுக்கல் வரையில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர் போரட்டம் நடத்தினர்.

இதனையடுத்து கடந்த 2007ம் ஆண்டு திண்டுக்கல்-பொள்ளாச்சி- போத்தனூர் ,
பொள்ளாச்சி – பாலக்காடு அகல ரயில் பாதைக்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்தது.

இதனையடுத்து இந்த திட்டமானது பலகட்டமாக பிரித்து பணிகள் நடைபெற்றது. திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி – பாலக்காடு பணிகள் முடிவடைந்த நிலையில் பொள்ளாச்சி போத்தனூர் வரையிலான 40 கிலோ மீட்டர் தூர பணிகள் மட்டும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் போத்தனூர் – பொள்ளாச்சி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனை, ரயில்வே தெற்கு வட்ட பாதுகாப்பு ஆணையர் மனோகரன் சோதனை ஓட்டத்தினை ஆய்வு செய்தார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வே தெற்கு வட்ட பாதுகாப்பு ஆணையர் மனோகரன்,

போத்தனூர் பொள்ளாச்சி இடையிலான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும் தொழில்நுட்ப ரீதியில் ரயில் பாதையில் வேகப்பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டு மத்திய ரயில்வே துறைக்கு அறிக்கை அனுப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்குவது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்யும். சுமார் 340 கோடி மதிப்பீட்டில் இந்த போத்தனூர் பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டம் முடிவடைந்து இருப்பதாகவும், தென்மாவட்டங்களுக்கு செல்ல இந்த வழித்தடம் முக்கியமானதாக இருக்கும் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தெரிவித்தார்.2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போத்தனூர் பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க