April 18, 2020
தண்டோரா குழு
கோவை போத்தனூர் சுந்தராபுரம் ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மூலம் போலீஸார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் அதிக பாதிப்புகள் உள்ள பகுதி ஹாட்ஸ்பார்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோவை போத்தனூர் பகுதியில் முக்கிய சாலைகள், தெருக்கு ஹாட்ஸ்பார்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளது. அங்கு தினமும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பகுதியில் அதிவிரைவு படையின் வஞ்ரா வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும் மினி ஆட்டோ வாகனங்கள் மூலம் ஒலிப்பெருக்கியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பெருமளவு இங்கு வாகன ஓட்டங்கள் குறைந்துள்ளது. இருப்பினும் சுந்தராபுரம் , சங்கம் வீதி, போத்தனூர், உள்ளிட்ட பெரும்பாலான பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.