• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட சுந்திராபுரம் பகுதியில் 120 கண்காணிப்பு கேமராக்கள்

July 24, 2019 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட போத்தனூர் காவல் எல்லையில் சுந்திராபுரம் பகுதியில் 120 கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழாவை மாநகர காவல் ஆணையாளர் துவங்கி வைத்தார்.

கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவும் மூன்றாம் கண் என சொல்லப்படுகிற கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியானது மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உத்தரவின் பேரில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மற்றும் குற்றப் பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.

இதில் முதற்கட்டமாக ஆர்எஸ்புரத்தில் துவங்கி, பீளமேடு காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, காட்டூர் காவல் எல்லை என கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது டி-3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல புனரமைக்கபட்ட புறக்காவல் நிலையமும் திறக்கபட்டுள்ளது.

இந்த துவக்கவிழா நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐபிஎஸ்,மாநகர காவல் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், ஐபிஎஸ்,உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் வெற்றி செல்வன், மற்றும் கேமராக்கள் அமைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்ட போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் வி.மகேஸ்வரன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க