• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போதையில் மருத்துவமனையிலேயே படுத்து தூங்கிய டாக்டர் நோயாளிகள் அவதி!

November 8, 2018 தண்டோரா குழு

தஞ்சையில் மது போதையில் பணிக்கு வந்த டாக்டர் மருத்துவ மனையிலேயே படுத்து உறங்கியதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தஞ்சையில் உள்ள திருவையாறு அரசு மருத்துவமனையில் பொது மருத்துவராக இருப்பவர் மகபூப் பாட்ஷா. இருவருக்கு தீபாவளியன்று பணி இருந்ததால் அன்று இரவு பணிக்கு வந்து பின்னர் நோயளிகளை கவனிக்காமல், ஓய்வு அறைக்கு சென்று உள்பக்கமாக தாள்ளிட்டு உறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷம் அருந்தியதாக ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவரின் கையொப்பம் அவசியம் என்பதால் மருத்துவமனை செவிலியர்கள் டாக்டரை எழுப்பியும் அவர் செவிசாய்க்காமல் உறங்கியது மட்டுமில்லாமல், செவிலியர்களை திட்டியனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கிய ஒருவரும் மருத்துவமனைக்கு வந்துள்ளார், டாக்டர் போதையில் எழுந்திருக்காமல் இருந்ததால் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பல தரப்பில் இருந்து புகார்கள் வந்த நிலையில் டாக்டர் மகபூப் பாஷா மீது துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் அவர் போதையில் பணிக்கு வந்தது உறுதி செய்யப்பட்டதால் அவர் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க