• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போதையில் மயங்கிய விமானி சிறையில் அடைப்பு

January 3, 2017 தண்டோரா குழு

அளவுக்கு அதிகமாக மது அருந்தி விமானி அறைக்குள் (காக்பிட்) மயங்கி விழுந்த விமானியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கனடா நாட்டில் விமானம் புறப்படும் நேரத்தில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விமான அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 2) கூறியதாவது:

மேற்கு கனடாவில் உள்ள கல்காரி விமான நிலையத்திலிருந்து மெக்ஸிகோவிற்கு 1௦௦ பயணிகளுடன் போயிங் 737 ரக விமானம் புறப்படத் தயாரானது. இந்நிலையில் விமானத்தை ஓட்ட வேண்டிய 37 வயதான விமானி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி, விமானி ஓட்டிகளின் அறைக்குள் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே விமான ஊழியர்கள் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளனர். அதிகாரிகள் உடனே அங்கு விரைந்து வந்து, குடிபோதையில் கிடந்த விமானியை விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.

அவரைச் சோதனை செய்த போது அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மற்றொரு விமானியைக் கொண்டு அந்த விமானம் இயக்கப்பட்டது. விமானச் சட்டங்களைச் சரியாக பின்பற்றத் தவறியதால் குற்றம் சாட்டப்பட்ட அந்த விமானி சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க