July 2, 2018
தண்டோரா குழு
போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் இன்று நடந்தது.இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்,
போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.போதைப்பொருள் இல்லாத பஞ்சாப்பை உருவாக்குவதே இலக்கு.போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் பரிந்துரையானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.